×

சமூக இடைவெளியை கடைபிடிக்காத பட்டாபிராம் மீன் மார்க்கெட்டுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

ஆவடி: சமூக இடைவௌியை கடைபிடிக்காத பட்டாபிராம் மீன் மார்க்கெட்டு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். ஆவடி மாநகராட்சி சார்பில் பட்டாபிராம், தண்டுரை பிள்ளையார் கோவில் தெருவில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ள 58 கடைகளில் மீன், கருவாடு மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.  இந்த மார்க்கெட்டில் ஆவடி, பட்டாபிராம், சோரஞ்சேரி, சித்துக்காடு, அன்னம்பேடு, கருணாகரசேரி, மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீன்கள், காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இங்கு தினசரி 1000க்கும் மேற்பட்டோரும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வந்து செல்கின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக, கடந்த சில தினங்களாக மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் மீன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆணையாளர் ரவிசந்திரன் மார்க்கெட்டை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, வருவாய் அலுவலர் இந்திராணி, சுகாதார அலுவலர் மோகன், ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் மார்கெட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கூட்டம் கூட்டமாக நின்று மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் மீன் மார்க்கெட்டை பூட்டி சீல் வைத்தனர். அதற்கு முன்பாக மார்க்கெட்டில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி அனைத்து கடைகளுக்கும் கிருமிநாசினி தெளித்தனர்.



Tags : Sealing, Fish Market, adhere, social gap,Officers Action
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்