×

கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ள ரோபோக்கள்

சீனா, அமெரிக்க உள்ளிட்ட சில உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளை கையாளவும் கவனித்துக் கொள்வதிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதை போலவே இந்தியாவிலும் விரைவில் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் வுகான் நகரில் உள்ள ஹாங்ஷான் மைதானத்தில் இந்த மாத துவக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 14 ரோபோக்களுடன் நவீன மருத்துவமனை ஒன்று தொடங்கப்பட்டது. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நேரம் தவறாமல் மருந்து கொடுப்பது, உடல் உஷ்ணநிலையை அவ்வப்போது அளவிடுவது, தூய்மை பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை இந்த ரோபோக்கள் செய்கின்றன.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க், தாய்லாந்தின் பாங்காக் போன்ற நகரங்களில் உள்ள சில மருத்துவமனைகளிலும் இதே போன்று கொரோனா நோயாளிகளை ரோபோக்கள் பராமரித்து வருகின்றன. அமெரிக்காவில் நோயாளிகளின் தொண்டைச்சளி, ரத்த மாதிரிகளை சேகரிக்கும் வகையிலான ரோபோக்களை தயாரிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் உள்ள ‘சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்து, உணவு போன்றவற்றை கொடுக்கும் பணியில் ரோபோக்களை ஈடுபடுத்துவது குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

கேரளாவில் ‘ஸ்டார்ட்அப் அசொமோவ் ரோபோடிக்ஸ்’ என்ற நிறுவனம் மூன்று சக்கரங்களை கொண்ட ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோக்களை கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளை கையாள பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறி வருகிறது. இதனால், இந்திய மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளிலும் விரைவில் ரோபோக்களின் நடமாட்டத்தை காணமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : corona patients ,Corona ,Robots Take Care , Robots , patients , Corona
× RELATED புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா...