×

தடுப்பு மருந்து சோதனையில் சீனா

பீஜிங்: கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுகான் நகரில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் முறையாக அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட முடிவுகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தால், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் அங்கும் பரிசோதிக்கப்படும். இதனிடையே, அமெரிக்காவின்  ஜான்சன் & ஜான்சன், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மேம் பாட்டு ஆணையம் உடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதற்கான சோதனை முடிவுகள் தெரியவந்த பின்னர், தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் வினியோகிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.



Tags : China , Preventive Medicine, China, Corona
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்