×

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி தம்பதி முறைப்படி விலகினர்

லண்டன்; பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் ஆகியோர் முறைப்படி விலகினர். பிரிட்டன் ராணி எலிசபெத் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் அமெரிக்க நடிகை மேகன் மார்கலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அரச பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹாரி அறிவித்தார். எனினும் அவர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மீண்டும் அரச குடும்பத்துக்கு திரும்ப அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து கனடா நாட்டில் உள்ள வான்கூவர் தீவில் தங்கியிருந்தனர். தற்போது ஹாரி, மேகன் தம்பதி தனது குழந்தை அர்ச்சிவுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் `பிரிட்டனுடன் நல்ல நட்பு பாராட்டி வந்தாலும், இளவரசர் ஹாரி, மேகன் தம்பதிக்கான பாதுகாப்பு செலவை ஏற்க முடியாது’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி நேற்று முறைப்படி பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து விலகினர். இது தொடர்பாக அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், `‘எங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு புதிய உலகத்தில் புகுந்துள்ளோம். எங்களுக்கு இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’’ என பதிவிட்டுள்ளனர்.


Tags : Harry ,royal family ,British , British royal family, Prince Harry
× RELATED விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு...