×

நலிந்த கலைஞர்களுக்கு உதவ அரசுக்கு நாசர் கோரிக்கை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் நடிகர் நாசர், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விடுத்துள்ள கோரிக்கை:
நடிகர் சங்கத்தில் 1,500 துணை நடிகர், நடிகைகள் மற்றும் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் நாடக கலைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தேசிய ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாடக விழாக்களும் நடக்கவில்லை. இதையே நம்பியுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனே திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவ பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


Tags : Nasser ,government ,artists , Dirty Artists, Aid, Government, Nasser
× RELATED இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 84 பேர் பலி