×

10 பொதுத்துறை வங்கிகள் 4 ஆகிறது வங்கிகள் இணைப்பு இன்று அமல்

* 2017ல் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இந்த இணைப்பையும் சேர்த்து, பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

புதுடெல்லி: 10  பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இன்று இணைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளபோதும்,  திட்டமிட்டபடி வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று அமலுக்கு வருகிறது. இதன்படி,  ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் , யூனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. இதன்மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து 2வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி மாறுகிறது. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படுகிறது.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன்  ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கிகள் இணைக்கப்படுகின்றன.  இந்த இணைப்பின்மூலம், பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் என 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.  தற்ேபாது ஊரடங்கு அமலில் உள்ளதால், வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த இணைப்பு நிகழ்ச்சியை நடத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கி                                                                                                                   இணைப்பு வங்கி
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா      பஞ்சாப் நேஷனல் வங்கி
சிண்டிகேட் வங்கி                                                                                                கனரா வங்கி
அலகாபாத் வங்கி                                                                                                இந்தியன் வங்கி
ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கி                                              யூனியன் பாங்க் ஆப் இந்தியா



Tags : banks , 10 Public Sector Banks, Banks Link
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்