×

கொரோனா தடுப்பு நிவாரண நிதி ரோகித் ஷர்மா 80 லட்சம் உதவி

மும்பை: கொரோனா தொற்று தடுப்பு, நிவாரண பணிகளுக்காக கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா ₹80 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளார். கொரானா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு  செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.  பிரதமர் பாதுகாப்பு நிதி,  மாநில முதல் அமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில்  நிதி திரட்டப்படுகின்றன. இதற்கு தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் நன்கொடை அளித்து வருகின்றனர். இதுவரை விளையாட்டு வீரர்களில் அதிகபட்சமாக கிரிக்கெட் வீரர் ரெய்னா  52லட்சம், கங்குலி, சச்சின், கம்பீர் ஆகியோர் தலா ₹50 லட்சம் தருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா 80 லட்சத்தை கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு வழங்க உள்ளார்.

அதில்  45லட்சம் பிரதமர் பாதுகாப்பு நிதிக்கும், ₹25 லட்சம் மகாராஷ்டிரா முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கும் கொடுக்கிறார். இதுதவிர இந்திய உணவு அளிக்கும் திட்டத்துக்கு 5லட்சம், ஆதரவற்ற தெருநாய்களின் நலத்திட்டத்துக்காக 5 லட்சம்,  தெருநாய்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காகவும் தனியாக நிதி வழங்க திட்டமிட்டுள்ளார். ‘நமது நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. என்னால் முடிந்ததை செய்துள்ளேன். நமது தலைவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


Tags : Rohit Sharma , Corona, Relief Fund, Rohit Sharma
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...