×

ஜார்கண்டில் முதல் பாதிப்பு

ராஞ்சி: இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக ஜார்கண்ட் இருந்தது. இந்நிலையில், முதல் முறையாக அங்கு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் கொரோனா பாதிப்புடன் கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ரத்த சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெண்ணும் மேலும், 17 வெளிநாட்டவர்களும் ராஞ்சியில் உள்ள ஒரு மசூதியில் மறைந்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சமீபத்தில் அவர்களை பிடித்தனர். தற்போது அந்த மசூதியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தவர்களுக்கும் சோதனை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.Tags : Jharkhand , Jharkhand, Corona
× RELATED உயிர்தேசம், பொருட்சேதம் எதும் இல்லை;...