×

மாற்றுத்திறனாளி, முதியோருக்கு வீடுகளில் ரேஷன் பொருள்: அமைச்சர் பேட்டி

கோவில்பட்டி: மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்தார்.  கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 100 சதவீத அளவுக்கு கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு  கூட கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்ற அளவுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு  வருகிறது.

இம்மாவட்டத்தில்  வெளிநாட்டில் இருந்து வந்ததாக கண்டறியப்பட்ட 2100 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர். நாளை (2ம் தேதி முதல்) அனைத்து  ரேஷன் கடைகள் மூலம் 1000 மற்றும் இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இதில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Tags : Homes ,Persons ,Disabled ,Minister , Minister of Disability, Elderly, Ration Material, Minister
× RELATED மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி