×

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: செயற்கை சுவாசம் அளிக்கும் நிலை இல்லை

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் நிலை ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள வரும் சிறப்பு பிரிவை மத்திய சுகாதாரத்துறை மூத்த அருண்குமார், உலக சுகாதார நிறுவன மருத்துவ அலுவலர்சுரேந்திரன் உள்ளிட்ட மூவர் அடங்கிய மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதன்பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் கொண்ட பிரிவும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளும் கொண்ட பிரத்யேக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் 11 வது கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது.  வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் குழந்தையின் உடல் நலன் குறித்து விசாரித்து வருகிறோம்.  கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கூட செயற்கை சுவாசம் அளிக்கும் நிலை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Minister Vijayabaskar ,Minister , Minister Vijayabaskar, Corona, artificial respiration
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...