×

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிற மாவட்டத்துக்கு செல்ல கலெக்டர் அனுமதி தேவை: தமிழக அரசு உத்தரவு

சென்னை:  கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக சென்னை அல்லது பிற மாவட்டங்களுக்கு அல்லது வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய விரும்பினால் அவர்கள் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 7530001100யை தொடர்பு கொண்டோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவே தொடர்பு கொள்ளலாம் மற்றும் gcpcorona2020@gmail.com என்ற முவரியில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளியிடங்களுக்கு செல்வோர் அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இது குறித்து வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திருமணம், இறுதி சடங்குகள், உடல் நலக்குறைவு போன்ற சில காரணங்களுக்காக ஒவ்வொருவரும் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்படி பயணம் மேற்கொள்வோர் உரிய அனுமதி சீட்டு பெற்ற பிறகே பயணம் செய்ய வேண்டும்.

இதற்கான அனுமதி சீட்டுகளை வழங்கும் அதிகாரம் சென்னையில் சென்னை மாநகராட்சிக்கும், மாநிலத்தின் இதர மாவட்டங்களில் கலெக்டர் மூலம் வழங்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் செல்ல விரும்பினால் தாசில்தார்கள் மூலம் வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதியாக இருந்தால் மண்டல அலுவலர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். இது குறித்த விவரங்களை மாநகராட்சி, கலெக்டர் அலுவலகத்திடம் தெரிவிக்க வேண்டும்.



Tags : district collector , 144 Prohibition Order, Collector, Government of Tamil Nadu
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்