×

கொரோனா உறுதி செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் 1.10 லட்சம் வீடுகளில் உள்ள 4 லட்சம் பேருக்கு பரிசோதனை: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை : கொரோனா உறுதி செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் 1.10 லட்சம் வீடுகளில் உள்ள 4 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள அவர்களது வீடுகளைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவு வட்டத்தை கட்டுப்படுத்துதல் மண்டலமாகவும், கூடுதலாக 2 கி.மீ. தொலைவு வட்டத்தை இடைப்பகுதியாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.  

இப்பகுதிக்குள் வரும் அனைத்து வீடுகளிலும் சுகாதார குழுக்கள் வீடுவீடாகச் சென்று தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறியும் பணியினை மேற்கொண்டனர். மேலும், நோய் தொற்று கண்டறியப்பட்ட நபரின் தொடர்பிலிருந்த நபர் யாரேனும் இப்பகுதிக்குள் இல்லை என்றால் அவர் எங்குள்ளார் என்பதையும் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் பணியும்  மேற்ெகாள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 30ம் தேதி வரை 12 மாவட்டங்களில், 2,271 களப் பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. இப்பணியில் 1,08,677 வீடுகளில், 3,96,147 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Examination ,households ,districts , Corona, 12 districts, Department of Public Welfare
× RELATED யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில்...