×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யாததால் செடிகளில் வீணாகும் பூக்கள்: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக சாமந்தி, குண்டுமல்லி, செண்டுமல்லி ஆகிய மலர் வகைகளும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர் வகைகளையும் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக, பூக்களை அறுவடை செய்ய வேலையாட்கள் கிடைக்கவில்லை. அறுவடை செய்தாலும் சந்தைக்கு கொண்டு செல்ல வழி இல்லை. கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால், பூக்கள் மற்றும் பூ மாலை விற்பனை முற்றிலும் முடங்கிவிட்டது.

 இதுகுறித்து ராயக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ராயன் கூறுகையில், ‘ஏக்கருக்கு ரூ70 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை செலவிட்டு மலர் சாகுபடி செய்கிறோம். ஆனால், ஊரடங்கு உத்தரவால் பூக்கள் விளைச்சல் அதிகரித்தும், அதை அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், பூக்கள் அனைத்தும் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுத்து, ஏக்கருக்கு ரூ70 ஆயிரம் வரை இழப்பீடு வழங்குவதுடன், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும்,’ என்றார்.

Tags : plants ,Krishnagiri district ,flowering plants , Krishnagiri, Harvesting, Flowers
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...