×

கொரோனா பீதியால் கொண்டாட்டம் ‘கட்’ 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்

காரைக்குடி: கொரோனா ஊரடங்கு உத்தரவையடுத்து காரைக்குடியில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதில் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவர் ராமு மகன் பெரியசாமி. கல்லல் கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் கிருஷ்ணவேணி. இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடியாது என கூறி உரிமையாளர் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார்.

இதையடுத்து நேற்று காலை காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமக்கள் உட்பட 10 பேருக்கு மட்டும் கோயில் நிர்வாகம் அனுமதியளித்தது. இதையடுத்து மணமக்கள் உள்பட 10 பேர் மட்டும் கலந்து கொண்டு திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்தது.

Tags : Corona Panic Celebration 'Cut , Corona Panic, married
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...