×

சமூக இடைவெளியில் நாத்து நடும் பணி: இடுபொருட்கள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றி தஞ்சையில் நாத்து நடும்  பணிகள் நடைபெற்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவளின் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது. இந்த உத்தரவை கடைபிடிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு உள்ளேயே இருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கி போய் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் புலவன்காடு பகுதியில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. சமூக இடைவெளியுடன் பாத்திக்கு ஒரு பெண்கள் நின்று நாத்து நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தஞ்சையில் போதிய இடங்களில் விவசாய விளைபொருட்கள் நிலையங்களும், உர நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் தற்போது நடப்பட்டு வரும் பயிரானது வீணாக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது உரிய நேரத்தில் கடை திறக்கப்படும் என,

ஆனால் அவ்வாறு அறிவிக்கப்பட்ட அறிவிப்பு வெறும் அறிவிப்பாக தான் இருந்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் போர்செட் என அழைக்கப்படும் ஆழ்துளை கிணறு மூலமாக தற்போது விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய நேரத்தில் விளைபொருட்களும், இடுபொருட்களும் கிடைக்காத சூழ்நிலையில் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


Tags : Social space, natu- ral work
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை