×

ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க தமிழகம் வருகிறதா? துணை ராணுவம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாலை சந்திகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 201 நாடுகளில் பரவி 34 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களால், இந்தியாவிலும்  கொரோனா பரவி 1,251 பேரை பாதித்துள்ளது. இதுவரை 34 பேர் பலியாகியுள்ளர்.  தமிழத்தை பொருத்தவரை இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் எண்ணிக்கை 67-லிருந்து 74-ஆக  உயர்ந்துள்ளது. தற்போது வரை ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு களம் இறங்கியது. கடந்த 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம்  மக்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் ஊரடங்கை கடைப்பித்தனர். அடுத்த 2 நாளில் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 500 ஆகவும் உயர்ந்தது. இதனால் கடந்த 24ம் தேதி  இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, இன்று(மார்ச் 24) நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். முன்னதாக தமிழகத்தில் இன்று 31-ம் தேதி  வரை அமலில் இருந்த ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக அரசும் அறிவித்தது.

தொடர்ந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற நிறுவனங்கள் மூடப்பட்டன. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் மக்கள் வெளியே சுற்றி சென்று  வருகின்றனர். இவர்களை சமாளிக்க காவல்துறைக்கு பேரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்பாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து  பேசவுள்ளார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கவுள்ளார். மேலும், பொதுமக்கள் விட்டை விட்ட வெளியே வராமல் இருக்க துணை ராணுவத்தை தமிழகம் கொண்டு வர ஆலோசனை நடத்தவுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்படுகிறது.



Tags : Palanisamy ,Tamil Nadu ,Governor ,Banquarol , Tamil Nadu comes to strict curfew? Paramilitary
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...