×

நிபுணர் குழுவை 24 மணி நேரத்தில் அமைக்க வேண்டும்: கொரோனா குறித்த பொய் செய்திகள் பரவுவதை தடுங்க: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1,251 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்றால் 34 பேர் பலியாகி உள்ளனர். இதனால், மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 24-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் சிறைகைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு இருப்பவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர். அதில் விசாரணை கைதிகளை பிணையிலோ அல்லது பரோலிலோ விடுவிக்கலாம் என்றும் கூறினர். எதுபோன்ற குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்க உயர்நிலை குழு ஒன்றை அமைக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மத்திய, மாநில சிறைகளில் இருக்கு ஆயிரகணக்கான கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கிராமபுறங்களில், கொரோனா இதுவரை பரவவில்லை. இடம்பெயர் தொழிலாளர்கள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதை அனுமதிக்க முடியாது என மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் குறித்து பொய் செய்திகள் பரவுவதை தடுக்க வேண்டும். நிபுணர் குழுவை 24 மணி நேரத்தில் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சரியான அனைத்து தகவலையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக்கூறி வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : Expert panel ,government ,SC ,Supreme Court , SC set to establish expert panel in 24 hours: Supreme Court directs central government to stop spreading false rumors
× RELATED பெரம்பலூரில் பாஜ எம்பியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்