×

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் மற்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பிரதோஷம்: யூ-டியூப் மூலம் நேரலையில் காணலாம்

சென்னை: அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணியளவில் நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது.இந்நிகழ்ச்சி C http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARAR TEMPLE என்ற யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உள் புறப்பாடும் பக்தர்களின் கோரிக்கையின் படி ஒளிபரப்பப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை பக்தர்கள் யூ-டியூப் மூலம் நேரலையில் காணலாம்.சென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.பக்தர்கள் https://www.youtube.com/c/Thiagarajaswamy Vadivudaiyamman TempleOfficial  என்ற யூ-டியூப் சேனல் மூலம், இன்று மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும், தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம் காணலாம். …

The post திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் மற்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பிரதோஷம்: யூ-டியூப் மூலம் நேரலையில் காணலாம் appeared first on Dinakaran.

Tags : Thiruvottriyur Thiagarajaswamy Temple ,Mayalapur ,Kapaleeswarar Temple ,U-Tube ,Chennai ,Thiruvottyur Thyagarajaswamy Temple ,Mayilapur ,
× RELATED பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர்...