×

கொரோனா வார்டாக அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை பயன்படுத்திகங்க: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

சென்னை: இந்தியா உட்பட உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். 1,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 86 பேர்  குணமடைந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசுக்கு இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும்  நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களால் முடிந்த உதவி செய்யவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தி கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். மு.க.ஸ்டாலின்
ஒப்புதல் அளித்த கடித்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷிடம்  திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார். முன்னதாக, கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு  திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கு ஆன்லைனில் நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், அத்தியவாசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள திமுக  இளைஞர் அணி சார்பில் 93618 63559 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் பார்த்திபன்:

நடிகர் பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், தனக்குத் தோன்றிய சில யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளாவதாகச் சொன்ன பார்த்திபன், போதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் சில அவசரகால  மருத்துவமனைகளை உருவாக்குவதற்காக நம்மால் சின்ன இடங்களை உருவாக்க முடியும். தெருமுனைகளில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில், அரசு கட்டடங்களில் நாம் சில சோதனை மருத்துவக் கூடங்களை உருவாக்கலாம். அதற்கு  உதவியாக எனக்கு கேகே நகரில் சொந்தமாக உள்ள இரண்டு வீட்டை வழங்கத் தயாராக இருக்கிறேன். அந்த வீட்டை அசரகால மருத்துவக் கூடமாக நிலைமை சரியாகும் வரை பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். என்னைப்  போலவே பலரும் இரண்டு வீடுகள் வைத்திருப்பார்கள். அவர்களும் இதைப்போலக் கொடுத்து உதவினால் நிலைமையைச் சரியாக கையாள உதவியாக இருக்கும். இது யோசனைதான். தேவை என்றால் செயல்படுத்தலாம் எனக் கூறியிருந்தார்.

நடிகர் கமல்:

இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.  அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

தொழிலதிபர் தென்னரசு சாம்ராஜ்:

ஜோலார்பேட்டை தொழிலதிபர் தென்னரசு சாம்ராஜ், தனது வீட்டை கரோனா தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார். 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுஉள்ள இந்த வீட்டில், 50-க்கும் மேற்பட்டோரை தங்கவைக்க  படுக்கை வசதி களை செய்துகொள்ள முடியும். இதுதொடர்பாக திருப்பத்தூர் அரசு மருத் துவமனை மருத்துவர்களிடம் அவர் முறையான தகவல் தெரிவித்திருந்தார்.


Tags : Art Gallery ,MK Stalin Anna Knowledge Campus ,Corona Ward ,DMK ,Anna Knowledge Campus ,MK Stalin ,Art Gallery of Make Use , Make use of Corona Ward's Art Gallery at Anna Knowledge Campus: endorsement of DMK leader MK Stalin
× RELATED விஜிபி உலக தமிழ்சங்கத்தின் 31ம் ஆண்டு விழா: சாதனையாளர்களுக்கு விருது