×

கேரளாவில் குடிநோயாளிகளுக்கு நிபந்தனையுடன் மது : தற்கொலையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருவனந்தபுரம்: கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க நிபந்தனை அடிப்படையில், மது பாட்டில்களை வழங்க அந்த மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், குடிநோயாளிகளுக்கு நிபந்தனை அடிப்படையிலான மதுவிற்பனை வழங்க கேரள முதல்வர் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளார். மது குடிக்காவிட்டால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவோருக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது.

அந்த பாஸை பெற குடிநோயாளிகள் அருகில் உள்ள அரசு மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் தரும் மருத்துவக் குறிப்புச் சீட்டை மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். அத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் ஒன்று காட்ட வேண்டும். அப்போது அவர்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளில் குறிப்பிட்ட அளவு மது பாட்டில்கள் வழங்கப்படும். கேரளாவில் 16 லட்சம் பேர் நாள்தோறும் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர்கள் ஆவர். ஊரடங்கு உத்தரவால் மதுகிடைக்காததால் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மதுகிடைக்காததால் ஒவ்வொரு நாளும் 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.  இதுவரை 90 குடிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Kerala ,Drinking Patients ,Condition Drinking Patients , Alcohol to Condition for Drinking Patients in Kerala: Guidelines for Preventing Suicide Issue
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...