×

தனிமைப்படுத்தப்பட்டால் 28 நாள் சம்பளத்துடன் விடுமுறை

நொய்டா: கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்படும் ஊழியருக்கு 28 நாள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க நொய்டா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நொய்டா, கிரேட்டர் நொய்டா, கவுதம் புத்தாநகர் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு உத்தரவுப்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை கண்டிப்பாக ஏப்ரல் 14 வரை மூடி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தையும் வழங்க வேண்டும். ஏனெினில் இப்போது வழங்கப்பட்டு இருக்கும் 21 நாள் முடக்கம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஆகும். மேலும் ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலோ அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சந்தேகம் இருந்தாலோ அவர்களுக்கு 28 நாள் சம்பளத்துடன் உரிய விடுமுறை அளிக்க வேண்டும். அவர்கள் உரிய முறையில் சிகிச்சை பெற்று உடல் நலம் பெற்றுள்ளதாக சான்றிதழ் வழங்கினால் மட்டுமே மீண்டும் அவர்களை பணிக்கு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Vacation , Vacation, 28 day pay , isolated
× RELATED சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கு கோடை...