×

144 தடை உத்தரவை மீறி வெளிமாவட்டங்களுக்கு செல்ல தன்னிச்சையாக அனுமதி சீட்டு: இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி வெளி மாவட்டங்களுக்கு மக்கள் செல்ல தன்னிச்சையாக அனுமதி சீட்டு வழங்கிய இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தவை அரசு பிறப்பித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ெசன்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கார்களில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட எல்லையில் உள்ள போலீசார் விசாரணை நடத்தியபோது, சென்னை எஸ்பிளனேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தன்னிச்சையாக கையெழுத்திட்டு அனுமதி சீட்டு கொடுத்து இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலை சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் தினகரன் கவனத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர். அதன்படி கூடுதல் கமிஷனர் அதிரடியாக மைக்கில் அழைத்து நேற்று முதல் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் இருந்து எந்த அனுமதி சீட்டும் அளிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதேபோல் தன்னிச்சையாக கையெழுத்திட்டு அனுமதி சீட்டு வழங்கியதாக வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Armed Forces , 144 arbitrary permission , abroad , violation , prohibition , Inspector changes to Armed Forces
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!