×

டெல்லியில் நடந்த மதவழிபாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா அறிகுறி: சீல் வைத்தது போலீஸ்

புதுடெல்லி: டெல்லியில் மதவழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அந்த நிகழ்ச்சி நடந்த பகுதியை போலீசார் சீல் வைத்துள்ளனர். கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் எந்தவித அனுமதியும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி தெரிந்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சீல் வைத்துள்ளனர். நோய் தொற்று தெரிந்த பலரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘மத வழிபாடு நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டதும், தடை உத்தரவை மீறியது தொடர்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம். தற்போது நோய் தொற்று இருப்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.


Tags : many ,Corona ,ceremony ,Delhi , Delhi, Religious, Corona, Seal
× RELATED பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி...