×

‘கோவிட்-19’ தடுப்புக்கு மின்வாரிய, போக்குவரத்து தொழிலாளர் ஒருநாள் ஊதியம்

சென்னை: தமிழக அரசின் ‘கோவிட்-19’ தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒருநாள் ஊதியத்தை மின்வாரியம் மற்றும் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வழங்குகின்றனர். இதுதொடர்பாக மின்வாரிய கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், மின்வாரிய தலைவருக்கு அளித்துள்ள கடிதத்தில், ‘கொரோனா நிவாரணத்துக்கு தமிழக மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் மனமுவந்து தங்களது ஒருநாள் ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள தொழிற்சங்கத்தினர் சம்மதித்துள்ளனர்.  இதை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்துத்துறைக்கு அளித்துள்ள கடிதத்தில், ‘தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள், ஒருநாள் ஊதியத்தை வழங்குவது என கூட்டமைப்பு சங்கங்கள் முடிவு மேற்கொண்டுள்ளன. எனவே தொழிலாளர்களிடம் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : transport workers ,Kovit-19 , Times Kovid-19, Electricity, Transport Workers, Wages
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...