×

உத்தரபிரதேசத்திற்கு திரும்பும் புலம்பெயர்ந்தோர் மீது கிருமிநாசினி தெளிப்பு: காங்கிரஸ் கண்டனம்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்திற்கு திரும்பும் புலம்பெயர்ந்தோர் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 99- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில்  வேலை பார்த்து வந்த  லட்சகணக்கான  மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி  வருகின்றனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சகணக்கில் உள்ளனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சமூக தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.  உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் இவ்வாறு சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரோனா அச்சத்தால் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளிவந்துள்ளது - லக்னோவிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் உள்ள ஊரில் வெளி மாநிலத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது கிருமி நாசினி

வீடியோவில், பாதுகாப்பு என்ற பெயரில்  பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்தோர் குழுவில் சாலையில் அமர்ந்திருக்கும் அந்த குழு மீது  கிருமிநாசினி தெளிப்பதைக் காணலாம். பார்வையாளர்களில் சில போலீஸ்காரர்களும் உள்ளனர். ஊரடங்கால் போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டிருப்பதால், அவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர், வார இறுதியில் டெல்லி,அரியானா மற்றும் நொய்டாவிலிருந்து இந்த குழு திரும்ப உள்ளது. வீடியோவில் ஒரு மனிதன் சொல்வதைக் கேட்கலாம் தயவுசெய்து கண்களை மூடு, குழந்தைகளின் கண்களையும் மூடு என கூறுகிறார். மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-  புலம்பெயர்ந்தோர் குளோரின் மற்றும் தண்ணீரின் கலவையுடன் தெளிக்கப்பட்டனர் .. எந்த இரசாயன கரைசலும் பயன்படுத்தப்படவில்லை. கண்களை மூடிக்கொண்டிருக்குமாறு நாங்கள் கேட்டு கொண்டோம்.

நாங்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்று அர்த்தமல்ல ... அனைவரையும் தூய்மைப்படுத்துவது முக்கியம், மேலும் ஏராளமான மக்கள் திரும்பி வந்ததால் பெரும் அவசரம் ஏற்பட்டது. எனவே நாங்கள் சிறந்தது என்று நினைத்ததைச் செய்தோம் என அதிகாரி கூறினார். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா தனது டுவிட்டரில்  இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார். நான் உ.பி. அரசாங்கத்திடம் முறையிடுகிறேன் ... இந்த நெருக்கடிக்கு (கொரோனா வைரஸ்) எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம். தயவுசெய்து இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். தொழிலாளர்கள் ஏற்கனவே நிறைய துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் மீது ரசாயனங்கள் தெளிக்க வேண்டாம். இது அவர்களைப் பாதுகாக்காது ... மாறாக அது அவர்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி உள்ளார்.

Tags : Congress ,migrants ,Uttar Pradesh , Disinfectant spray , migrants returning , Uttar Pradesh,Congress condemnation
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால்...