அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை: சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், மிக அடிப்படையான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதி மக்கள் எப்போதும் முகக்கவசத்துடன் வரவும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது என கூறினார். ஆகவே மிக அடிப்படையான தேவையை தவிர வேறு எதற்காகவும் வெளியே சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். எனவே தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 67-ஆக உயர்ந்துள்ளது என கூறினார். அனைவரும் ஒருவருக்கோருவர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என கூறினார்.

Related Stories:

>