×

சில்லி பாயின்ட்...

* பிசிசிஐ 51 கோடி: கொரோனா பிரச்னையை சமாளிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிரதமர் நிவாரண நிதியாக 51 கோடி வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் நன்கொடை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
* 30,000 மாஸ்க்: ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக உள்ள நிலையில், அந்நாட்டின் பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா சார்பில் 30,000 முகக் கவசங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* துப்பாக்கிசுடுதல் வீராங்கனை இஷா சிங் (15 வயது), பிரதமர் நிவாரண நிதியாக ₹30,000 வழங்கியுள்ளார்.
* வாசிம் ஜாபர் தேர்வு செய்த தலைசிறந்த ஐபிஎல் அணி: கேல், ரோகித், ரெய்னா, கோஹ்லி, டோனி (கேப்டன்/கீப்பர்), ரஸ்ஸல், ஹர்திக், ரஷித் கான், அஷ்வின், பூம்ரா, மலிங்கா, ஜடேஜா.
* துருக்கி கால்பந்து அணி முன்னாள் நட்சத்திரம் ருஸ்து ரெக்பருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* ஜூன் மாதம் நடைபெற இருந்த மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



Tags : Relief Fund Board , Prime Minister, Relief Fund, BCCI, Corona
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!