×

முதல்வர் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயாலளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:  சமூக வாழ்வின் பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு அனைத்து முனைகளிலும் செயலாற்றி வருகிறது. ஊரடங்கால் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள், சேவைத்துறைகள் என எல்லாப்பிரிவுகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னர் 25ம் தேதி கடிதத்தில் கோரியுள்ள 4 ஆயிரம் கோடி கோரியுள்ளார். கள நிலவரத்தின் தீவிரம் அறிந்த பின்னர் 28ம் தேதி கடிதத்தில்  மேலும் ரூபாய் 9 ஆயிரம் கோடி கோரியுள்ளார்.

தமிழக முதல்வர் இரு கடிதங்களில் கோரியுள்ள ரூபாய் 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது தவிர மாநில அரசு கடன் வாங்கும் அளவுக்கு அனுமதி வழங்குவது, மாநிலங்களுக்கு சிறப்பு மானியம் வழங்குவது போன்ற கோரிக்கைளை தாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

Tags : Mutharasan , CM, Prime Minister, Mutharasan, Coronavirus
× RELATED அம்பன் புயல் முன்னெச்சரிக்கை பிரதமர் தலைமையில் ஆலோசனை