×

ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னையில் காற்று மாசு குறைந்தது: வாகனங்கள், தொழிற்சாலைகள் இயங்காதது காரணம்

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னையில் வாகனங்கள், தொழிற்சாலைகள் முற்றிலும் இயங்கவில்ைல. இதன் காரணமாக காற்று மாசு மிகவும் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸால், தமிழகத்திலும் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாள்தோறும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதைக்கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பொதுமக்கள் வெளியில் வரவில்லை. சென்னையில் தினந்தோறும் 30 லட்சம் வாகனங்கள் இயக்கப்படும். தற்ேபாது ஊரடங்கு காரணமாக இந்த வாகனங்களில் இயக்கமும் முழுவதும் குறைந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வெளியில் வருகின்றனர். இதனால் சென்னை மாநகரில் உள்ள சாலைகளில் மிகவும் குறைவான வாகனங்களே செல்கின்றன. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. இதேபோல் சென்னையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் மூலம் பல்வேறு விதமான ெபாருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவையும் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை குறைந்துள்ளது.  இதுபோன்ற காரணங்களால் சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்றின் மாசு குறைந்துள்ளது. முன்னதாக காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது 4 இடங்களில் அதற்கான மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலமாக தினசரி காற்றின் தரம் கண்காணிப்படும். இவை முறையே ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

தற்போது இவ்விடங்களில் எடுக்கப்படும் காற்றின் அளவினை பார்க்கும் போது, கடந்த மாதத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவுள்ளது. அதாவது கடந்த மாதம் 28ம் தேதி காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரான் அளவு ஆலத்தூரில் 35.83 ஆக இருந்தது. தற்போது இம்மாதம் 28ம் தேதி இதன் அளவு 28.16 ஆக குறைந்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளது.  மேலும் இதேபோல் காற்றில் உள்ள 10 மைக்ரான் அளவு கொண்ட நுண்துகள்கள், கார்பன்மோனாக்சைடு, கந்தக டை ஆக்ஸைடு போன்றவற்றின் அளவும் ஆய்வுக்குட்படுத்தப்படும். தற்போது இதன் அளவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசுபாடு விபரம்:
இடம் 2.5 மைக்ரான் அளவு
        பிப்-28    மார்ச்-28
ஆலந்தூர்        35.83    28.16              
மணலி கிராமம்    20.22    2.64
மணலி        71.88    45.42
வேளச்சேரி    27.41    32.02

Tags : Chennai ,factories , Curfew, Chennai, Air Pollution, Vehicles, Factories
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான...