×

காற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு

திருத்தணி: திருத்தணி பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் மக்கள் குவிந்து பொருட்கள் வாங்க முண்டியடித்ததால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், போலீஸ் எஸ்பி அரவிந்தன் ஆகியோர் உத்தரவின்படி, திருத்தணி ஆர்டிஓ சொர்ண அமுதா, திருத்தணி டிஎஸ்பி சேகர், திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஒன்றிய ஆணையர்கள் மகேஷ்பாபு,  காந்திமதிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தடையை மீறி வாகனங்களில் செல்கின்றவர்களை கண்காணித்து வருகின்றனர். மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை திருத்தணி மேட்டு தெரு உள்பட பல இடங்களில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மக்கள் குவிந்தனர். அவர்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்காமல் நெரிசலில் முண்டியடித்து இறைச்சி வாங்கி சென்றனர்.

இதில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்ததால் மொத்தமாக பரவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இறைச்சி கடைகள் உள்பட எந்த கடைகளையும் திறக்க அனுமதிக்கக்கூடாது என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : meat shop ,spread , Curfew, meat shop, concentrated people, corona
× RELATED சென்னையில் குறையாத கொரோனா பாதிப்பு; மே...