×

கொரோனா பாதிப்பால் இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழக குடும்பத்தை மீட்க வேண்டும்: பிரதமர் மற்றும் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இந்தோனோசியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தோனோசியாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்தவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, வெளிநாட்டிலும் இந்தியர்கள் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தநிலையில், இந்தோனிசியாவில் 400-க்கும் மேற்பட்ட தமிழக குடும்பத்தினர் சிக்கித்தவித்துவருகின்றனர். இந்தோனிசியத் தமிழ்ச் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்தோனிசியாவில் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. அதனால், தமிழ் மக்கள் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழகம் திரும்ப விரும்புகிறார்கள். ஆனால், விமானப் போக்குவரத்து இல்லாததால் தமிழகம் திரும்ப இயலவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.


ஸ்டாலின் கோரிக்கை

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இந்தோனிசியாவில் தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் 430 குடும்பத்தினர் சிக்கித் தவித்துவருகின்றனர். இந்தியர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவர்கள் மீட்டு தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Stalin ,Indonesia ,CM ,Tamil , Corona, Indonesia, Tamil Nadu Family, Prime Minister, Stalin
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்