×

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை அறிக்கை

குமரி: கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 3 பேர் றேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில் முட்டத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, திருவட்டார் இளைஞர் ஒருவர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனா வார்டில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் நாகர்கோவில் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அவரது ரத்த மாதிரி பாரிசோதனை தகவல் இன்னும் வரவில்லை என கூறப்பட்டுள்ளது.


Tags : Kanyakumari State Medical College Hospital ,Health Department ,Kanyakumari Government Medical College Hospital , Three dead , Kanyakumari Government ,Medical College ,Hospital ,yesterday
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி