×

கோயிலில் உணவு தயாரித்து பட்டினியால் தவிப்பவருக்கு உடனே அளிக்க வேண்டும்: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு அன்னதான திட்டத்தின் கீழ் கோயில்கள் மூலம் உணவு தயார் செய்து அளிக்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவு: கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு கோயில்கள் மூலம் தினமும் உணவு தயார் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கோயில்களில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு வீடற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.  ஒவ்வொரு கோயில்களிலும் அன்னதான திட்டம் மூலம் 100 முதல் 250 நபர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும்.

பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில். மருதமலை முருகன் கோயில், சங்கரன்ேகாயில் சங்கரநாரயணசுவாமி கோயில், நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து வீடற்றவர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : Dinesh Reddy , Temple, Food, Commissioner Pahendra Reddy
× RELATED ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் உணவு கிடைக்காமல் மக்கள் அவதி