×

போக்குவரத்து பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு வழங்க வேண்டும்: தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.  தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, திருச்சி, சேலம், விழுப்புரம், கோவை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் உள்ளன. இதன்மூலமாக தினசரி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் .தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்கள் அனைத்தும் ஆங்காங்குள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த அளவிலான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தினசரி முறையாக உணவு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.  ‘‘வெளியில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. எனவே ஊழியர்களின் நலன் கருதி உனடியாக மூன்று வேளையும் தடையில்லாமல் உணவு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.


Tags : transportation workshops ,Employers , Transport Workshop, Food for Workers, Trade Unions
× RELATED ரயில்வே மருத்துவமனையின் சீர்கேடுகளை...