×

துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 15 ஆயிரம் வீடுகளில் கிருமி நாசினி தெளிப்பு: மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்

துரைப்பாக்கம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஜெட் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதார துறையினர் நேற்று தொடங்கி வைத்தனர்.
அப்போது, டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சுகாதார துறை சார்பில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டு, தினசரி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார பணி நடைபெற்று வருகிறது. 31 மாவட்டங்களில் 557 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த அனைவரையும் தீவிரமாக கண்காணித்து, அறிகுறிகள் தென்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி பராமரித்து வருகிறோம்.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கீழ் 40 முதல் 60 குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், சென்னையில் 24 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டால் தினமும் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்கலாம், என்றார்.

Tags : commissioner ,homes ,houses ,Duraipakkam Municipal ,Kannaki , MDuraipakkam, Kannaki Nagar, Disinfectant, Municipal Commissioner
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...