பல்லாவரம் அருகே மூதாட்டிக்கு கொரோனா

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 71 வயது மூதாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 25ம் தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரது ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் முடிவு நேற்று வந்தது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், உடனடியாக அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   சுகாதார துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவரது மகன் சமீபத்தில் கேரளா சென்று திரும்பியது தெரிய வந்தது. இதனால் அவர் மூலம் மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொழிச்சலூரில் முகாமிட்டு மருந்து தெளித்து, சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>