×

சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தொழிலதிபருக்கு தனி விமானம்: சென்னையில் இருந்து புனே சென்றது

சென்னை: புனேவை சேர்ந்தவர் கெவல் பக்டி (62), தொழிலதிபர். இவர், கிட்னி சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் ஓரளவு குணமடைந்துள்ளார். ஆனாலும் புனேவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருந்தது.  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், கெவல் பக்டி, புனே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறையின் அனுமதி பெற்று கொண்டு கெவல் பக்டியை, தனி சிறப்பு விமானத்தில் புனே அழைத்து செல்வதற்கு, அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி சிறப்பு அனுமதி பெற்று நேற்று மதியம் வேலூர் மருத்துவமனையில் இருந்து கெவல் பக்டி ஆம்பூலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார்.   மாலை 3 மணியளவில், சென்னை பழைய விமான நிலையத்தின் 6வது நுழைவாயில் வழியாக ஆம்புலன்ஸ் சென்றது. அங்கு, 12 இருக்கைகள் கொண்ட சிறிய ரக சிறப்பு தனி விமானம் தயாராக நின்றிருந்தது. அந்த விமானத்தில் தொழிலதிபர் கெவல் பக்டி மற்றும் குடும்பத்தினர் 3.30 மணிக்கு புனே புறப்பட்டு சென்றனர்.

Tags : businessman ,Pune ,Chennai ,flight , Termination of service, businessman, solo flight, Chennai, Pune
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது