×

கோயம்பேடு மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்றால் கடை உரிமம் ரத்து, வழக்குப்பதிவு: வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்றால்  கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சென்னையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.  இதை பயன்படுத்தி, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை துணை கண்காணிப்பாளர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் தயாள் தலைமையிலான போலீசார் கோயம்பேடு காய்கறி  மார்க்கெட்டில் தீடீர் சோதனை நடத்தினர்.  அப்போது, காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யபப்டும், என குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags : traders ,market ,Coimbatore , Coimbatore Market, Extra Price, Vegetable, Case Record
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு