×

கொரோனா வைரஸ் பயம் விஜய்யுடன் வீடியோகாலில் பேசிய நடிகை மாளவிகா

சென்னை: கொரேனா வைரஸ் பரவல் காரணமாக எல்லோரும் தங்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர். ஒருவரை ஒருவர் கட்டியணைப்பது அல்லது ெதாட்டுப் பேசுவது, கைகுலுக்குவது போன்ற நிலை மாறிவிட்டது. 2 அடி தூரம் விலகி நின்று பேசி, கொரோனா பரவாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.  இந்நிலையில் விஜய், மாளவிகா மோகனன், அனிருத் ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு பேச்சில், ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருப்பது குறித்து வீடியோகால் பேசியுள்ளனர்.

மாஸ்டர் ஹீரோ விஜய், இசை அமைப்பாளர் அனிருத், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோரை செல்போன் வீடியோகாலில் அழைத்த மாளவிகா மோகனன், இப்படம் குறித்தும், ெகாரோனா விழிப்புணர்வு குறித்தும் பேசினார். அந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்ேடாரி பாடலில் வரும் ‘பிராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ. கொஞ்சம் சில் பண்ணு மாப்பி என்று ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரிகளையும் பதிவிட்டுள்ளார்.


Tags : Malavika ,Corona ,Vijay , Corona Virus, Vijay, Videogol, Actress Malavika
× RELATED கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே 37 பேர்...