×

என்னது ஏப்.14 வரை டாஸ்மாக் இல்லையா.. குடிமகன்கள் அதிர்ச்சி... மனைவிகள் மகிழ்ச்சி...

திருச்சி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என கடந்த 24ம் தேதி மாலையுடன் மூடபப்டும் என முதல்வர் அறிவித்தார். அத்தியாவசிய தேவைகள் தவிர டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 24ம் தேதி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடிமகன்களால் அன்றைய நாளில் மட்டும் ரூ400 கோடிக்கு மது விற்பனையானது. இதற்கிடையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல் 14ம் தேதி வரையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் இதை கடைபிடிக்க வேண்டும். இதேபோல், மறைமுக மதுவிற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார். தற்போது, குடிமகன்கள் ஸ்டாக் வாங்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் தீர்ந்து போனதால் குடிமகன்கள் வருத்தத்திலும் சோகத்திலும் உள்ளனர்.

31ம் தேதிக்கு பின்னர் டாஸ்மாக் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுவால் குடும்பத்தில் நிம்மதியை இழந்த பெண்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாப்பிட உணவில்லை என்றாலும் கணவன்மார்கள் குடித்துவிட்டு ரகளை செய்யாமல், அடித்து துன்புறுத்தாமல் தற்போது வீட்டில் அமைதியாக சுருண்டு கிடப்பதால் குடும்பம் அமைதியாக, நிம்மதியாக இருப்பதாகவும், இப்படியே டாஸ்மாக் மூடிவிட்டாலும் நிம்மதிதான் என பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Citizens ,wives ,Tasmac , Tasmac, citizens, wives
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு