×

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மைதானங்களில் காய்கறி விற்பனை நடத்தப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை:  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த காய்கறி விற்பனையை மைதானங்களில் நடத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடும் இல்லை. மெடிக்கல், பால், காய்கறி, மளிகைக்கடை, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் ெபாருட்களின் விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஒன்றாக காய்கறி மார்க்கெட் உள்ளது.

தற்ேபாது மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காய்கறி மார்க்ெகட் மற்றும் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை நடக்கிறது. காய்கறிகள் வாங்கும்போது குறிப்பிட்ட இடைவெளி முறை பின்பற்றப்படுகிறது. ஆனால், காய்கறி வாங்குவதற்காக பொதுமக்கள் மொத்தமாக வருகின்றனர். இதனாலும் கூட சமூக இடைவெளி குறைய வாய்ப்புள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அனைவரும் நடமாடுவதால் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இதை தவிர்த்திடும் வகையில் நகரின் பல பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் மைதானங்களில் காய்கறி விற்பனையை நடத்த அரசு, அறிவிப்பாக இல்லாமல் நடவடிக்கையை தீவிரப்படுத்தலாம் என்றே பலரும் கருதுகின்றனர்.

இதுகுறித்து வக்கீல் ஜெகதீஷ்வரபாண்டியன் கூறுகையில், ‘‘தென்மாவட்டங்களின் அனைத்து நகரங்களிலும் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. பல ஊர்களில் குறிப்பிட்ட அளவிற்கு குறுகிய பகுதியில் தான் மார்க்கெட் அமைந்துள்ளன. இந்தப்பகுதிக்குள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து செல்வதால் கொரோனா தொற்று பரவக்கூடும். அனைத்து ஊர்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெரிய அளவிலான மைதானங்கள் உள்ளன. கொரோனா ெதாற்று பிரச்னை தீர்ந்து இயல்பு நிலை வரும் வரை மார்க்கெட்களை தவிர்த்து, காய்கறிகள் விற்பனையை அந்தந்த ஊர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம்தான் கொரோனா தொற்று பரவலை பொதுமக்களிடமிருந்து முழுமையாக கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.


Tags : spread , Corona, Vegetable Sales, Public
× RELATED கட்டுக்குள் இல்லை, கட்டுக்கு...