×

144 தடை உத்தரவையடுத்து நெல்லை, தென்காசியில் 92 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைப்பு'

நெல்லை: தடை உத்தரவையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 79 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 38 பேர் உள்பட நாடு முழுவதும் கொரோனா நோயால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மதுரை கான்ட்ராக்டர் உள்பட 18பேர் பலியாகியுள்ளனர். இதுதவிர பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். நோய் பரவாமல் தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்.14ம்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசியான பொருட்களான மருந்துகள், காய்கறிகள், பலசரக்கு கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் பைக், கார்களில் சுற்றித்திரியும் இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்தும் கைது செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நெல்லை மாநகரத்தில் போலீஸ் கமிஷனர் தீபக் எம் தாமோர் உத்தரவின் பேரில் பாளை கேடிசிநகர் நான்கு வழிச்சாலையின் மேம்பாலம், விஎம் சத்திரம் நான்கு வழிச்சாலை மேம்பாலம், விஎம் சத்திரம் நகர், நெல்லை அரசு மருத்துவமனை, பாளை பஸ்நிலையம், மார்க்கெட் புறக்காவல் நிலையம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் உள்ளிட்ட 50 தற்காலிக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பாளை கேடிசிநகர், டக்கரம்மாள்புரம், மேலப்பாளையம் கருங்குளம், தாழையூத்து உள்ளிட்ட 4 நிரந்தர செக்போஸ்ட்கள் உள்ளன.  மாவட்ட அளவில் வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாபநாசம், மானூர் உள்ளிட்ட 15 தற்காலிக போலீஸ் செக்போஸ்ட்களும், நிரந்தரமாக 4 செக்போஸ்ட்களும் உள்ளன. தென்காசி மாவட்டத்தில் தென்காசி புதிய பஸ்நிலையம், செங்ேகாட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி, ஆலங்குளம் உள்ளிட்ட 14 தற்காலிக செக்போஸ்ட்களும், நிரந்தரமாக 5 செக்போஸ்ட்களும் உள்ளன. நெல்லை மாநகரம், மாவட்டம், தென்காசியில் என மொத்தம் 92 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Tags : Paddy ,locations ,Tenkasi ,Checkpoint ,Thenkasi 144 Barrier , 144 Barrier, Paddy, Tenkasi, Checkpoint
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு