×

கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: கொரோனா தடுப்பு பணிக்காக பொதுமக்கள் நிதி வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு பொதுமக்கள் பணம் அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 20-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி ஞாயிற்றுகிழமை ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். கொரோனா  பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், நாட்டு மக்களுக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுரை வழங்கினார்.

மேலும், 24-ம்  தேதி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக பொதுமக்கள் நிதி வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். PM CARES, 2121PM20202 என்ற கணக்கில் பொதுமக்கள் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Name of Bank&branch: state bank of india, new delhi branch, UPI ID; pmvarse@sbi. IFSE CODE: SBIN0000691, SWIFT CODE: SBININBB104, இதன மூலம் மக்கள் பணம் செலுத்தலாம்.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தங்களால் ஆனா நிதியை தரலாம். பொதுமக்கள் அளிக்கும் சிறிய அளாவிலான நிதியுதவியும் ஏற்றுக்கொள்ளப்படும். பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு இது நீண்ட தூரம் செல்லும். இந்த நிதிக்கு அனைத்து தரப்பு மக்களும் நன்கொடை அளிக்கலாம். இந்த நிதியம் எதிர்வரும் காலங்களில் ஏற்பட்டால் இதேபோன்ற துன்பகரமான சூழ்நிலைகளையும் பூர்த்தி செய்யும். பேரிடர்களின் போது மக்களை காக்க இது போன்ற நிதியுதவிகள் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ் சங்கம் சார்பில் ரூ.21 லட்சம் நிதி
ஐ.ஏ.எஸ் சங்கம் ரூ. COVID19 ஐ எதிர்ப்பதற்கான ஆரம்ப பங்களிப்பாக PM-CARES நிதிக்கு 21 லட்சம் வழங்கியுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் குறைந்தது ஒரு நாளின் சம்பளத்தையும் பங்களிக்க வேண்டும். COVID19 க்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு கல்லையும் விட்டுவிட மாட்டோம் எனவும் கூறியுள்ளது.


Tags : Modi , Corona Prevention Mission, Sponsored by, Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...