×

கடுமையான சுவாச நோய் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் தகவல்

டெல்லி: அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 20-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி ஞாயிற்றுகிழமை ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். கொரோனா  பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், நாட்டு மக்களுக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுரை வழங்கினார்.

மேலும், 24-ம்  தேதி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடுமையான சுவாச நோய் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் யாருக்கும் கொரோனா மருந்து பரிசோதனை நடத்தப்படவில்லை. Hydroxychloroquine கொடுக்கப்பட்டோருக்கு வைரஸ் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுப்பதில் சமூக இடைவெளி, ஊரடங்கு முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் கூறியுள்ளனர்.


Tags : Coronavirus examination ,Indian Medical Research Council ,Coronal Examination ,Indian , Acute Respiratory Disease, Coronal Examination, Indian Medical Research Council
× RELATED கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும்...