×

கொரோனா வைரஸ் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புட்டு புட்டு வைத்த கொரிய தொலைக்காட்சித் தொடர்!!

லண்டன் : கொரிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் குறித்த அத்தனை விவரங்களையும் விலாவாரியாக விவரித்துள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு பிரித்தானியாவில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடர் My Secret Terrius.அந்த தொலைக்காட்சித் தொடரில், ஆயுதமாக பயன்படுத்தப்படும் ஒரு வைரஸ் குறித்து இரண்டு கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள்.அது ஒரு திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் போல் தோன்றுகிறது என்கிறார் மருத்துவர் ஒருவர். MERS, SARS, ப்ளூ மற்றும் இந்த கொரோனா வைரஸ் ஆகிய அனைத்துமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான் என்பதையும் தெரிவிக்கிறார் அந்த மருத்துவர்.

அத்துடன், இந்த கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தை தாக்கக்கூடியது என்று அவர் கூற, ஆனால் ஆயுதமாக பயன்படுத்தும் அளவுக்கு அது சீரியஸானது  அல்லவா என்று கேட்கிறார் மற்றொருவர்.தொடர்ந்து பேசும் அந்த மருத்துவர், 14 நாட்களுக்குப் பிறகுதான் இந்த கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதே தெரியும் என்றும், ஒருவர் இந்த வைரஸ் தொற்று உடையவருடன் தொடர்பு கொண்டால், ஐந்து நிமிடங்களுக்குள் அவரது சுவாச மண்டலத்தை அது தாக்கிவிடும் என்றும் கூறுகிறார்.அதற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று அந்த இன்னொரு நபர் கேட்க, அதற்கு இப்போதைக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ இல்லை என்றும் கூறுகிறார் அந்த மருத்துவர் கதாபாத்திரம் ஏற்ற நபர்.அந்த தொலைக்காட்சித் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள், தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இணையாகவே இருப்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது.இந்த தொலைக்காட்சித் தொடர், முதலில், 2018ம் ஆண்டு செப்டம்பருக்கும் நவம்பருக்கும் இடையில் தென் கொரியாவில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

Tags : Korean , Korean TV series about pudding pudding two years ago about coronavirus
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...