×

கொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்!!!

வாஷிங்டன் : தி சிம்ப்சன்ஸ் கார்டூன் நிகழ்ச்சி மற்றும் ஆஸ்ட்ரிக்ஸ் காமிக் புத்தகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்கூட்டியே கணித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகியுள்ளது. வைரல் பதிவுகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்படும் முன்பே அதுபற்றிய விவரங்கள் கார்டூன் மற்றும் காமிக் புத்தகத்தில் இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்

சீனாவின் வூகான் நகரில் புதிதாக படையெடுத்து உலகையை உலுக்கி வரும் கொரோனா புதிய வைரஸாக இருந்தாலும் இதன் பெயர் 2017 -ம் ஆண்டு வெளிவந்த ”ஆஸ்டரிக்ஸ்” காமிக் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயராகும்.2017-ம் ஆண்டு வெளிவந்த ஆஸ்டரிக்ஸ் என்னும் ஃப்ரெஞ்ச் காமிக்ஸ் தொடரில் வரும் வில்லனின் பெயர் கொரோனா வைரஸ் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ஆஸ்ட்ரிக்ஸ் சீரிசின் 37- வது பதிப்பான ”ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் சேரியட் ரேஸ்”  என்ற தொடரில் வரும் முகமுடி வில்லன் இத்தாலியில் ரோமானிய மக்களுக்கு எதிராக சேரியட் ரேசில் போராடுபவர்.அதுமட்டுமல்லாது அவருடன் உதவியாளராக வரும் ”பேசிலஸ்” , வில்லன் உடன் சேர்ந்து ரோமானிய மக்களுக்கு எதிராக இறுதி வரை சண்டையிட்டு வருகிற கதாபாத்திரமாகவும் சித்தரிக்கப்பட்டு வந்தன. இத்தொடரின் இறுதியில் இரு கதாபாத்திரங்களும் சேரியட் ரேசில் தோல்வியை அடைவார்கள்.

தி சிம்ப்சன்ஸ் கார்டூன் நிகழ்ச்சி

வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களில் 1993-ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான தி சிம்ப்சன்ஸ் தொடரின் குறிப்பிட்ட எபிசோடில் ஜப்பானை கடுமையாக பாதித்த ஒசாகா காய்ச்சல் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது. ஜப்பானில் ஒசாகா காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர் அனுப்பிய தொகுப்பில் இருந்து அமெரிக்காவுக்கும்  இந்த காய்ச்சல் பரவியது. இதனால் அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்டில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் நோய்வாய்ப்படுவார்கள்.


Tags : Cartoons predicting corona virus damage !!!
× RELATED நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில்...