×

21 நாட்கள் வீட்டில் அடைந்து இருக்கிறோமே என்று நினைக்காதீர்கள் இனி வரும் காலங்கள் சந்தோஷமாக வாழலாம் என்று நினையுங்கள்

* கை, கால்களை அசைத்து எளிய உடற்பயிற்சி செய்யுங்கள்
* பீன்ஸ், தக்காளி, கேரட் சாப்பிடலாம்
* அரசு டாக்டர் பேட்டி

சென்னை:  ஊரடங்கின் 21 நாட்கள் வீட்டில் அடைந்து இருக்கிறோமே என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த நேரத்தில் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்து அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
உணவை பொறுத்தவரை சளி பிடிக்காத வகையில் எந்த உணவையும் உட்கொள்ளலாம். ரொம்ப குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்கலாம். சளி பிடித்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாமோ என்று வீணாண சந்தேகம் தான் வரும். அதனால் தான் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடக்கூடாது. செயற்கை குளிர்பானங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. பழ வகைகளை சாப்பிடலாம். இயற்கையான ஜூஸ்களை குடிக்கலாம். பால், முட்டை போன்றவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. இதனால், இதனை பயன்படுத்தி கொள்ளலாம். காய்கறியை பொறுத்தவரை பீன்ஸ், தக்காளி, கேரட், நிறம் சார்ந்த காய்கறிகள், அதாவது சிகப்பு நிறத்தில் உள்ள காய்கறிகளை சாப்பிடலாம்.

வாக்கிங் செல்வோர், நடக்க முடியவில்லையே என்று கவலைப்படும் நீரிழிவு நோயாளிகள், முதியோர் யாரும் வீட்டில் இருக்கிறமோ என்று கவலைப்பட வேண்டாம். வாக்கிங் போக முடியாவிட்டால், வீட்டில் இருந்து செய்யக்கூடிய உடற்பயிற்சியை செய்யலாம். அதாவது, எளிமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்யலாம். வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சியை அரை மணி நேரம் செய்வதை ஒரு மணி நேரம் செய்யலாம். இதனால் எக்ஸ்ட்ரா கலோரி கிடைக்கும். அலுவலகம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்பவர்கள் வீட்டில் இப்படி இருக்கிறோமே என்ற மனநிலை ஏற்பட தான் செய்யும். இந்த மனநிலை மாறுவதற்கு சில மணி நேரம் ஆகும். வெளியில் சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும். இதன் அடிப்படையில் வீடுகளில் இருந்து மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு பயன்படுத்தலாம்.

வீட்டில் மாட்டிக்கொண்டோமே என்று ஒரு போதும் நினைத்து கொள்ளக்கூடாது. வெளியில் சென்றால் உயிருக்கு ஆபத்து, வீட்டில் இருப்பது என்பது தற்காலிகமான நடவடிக்கை என்று நினைக்க வேண்டும். 21 நாட்கள் வீட்டில் இருந்தால் சந்தோஷமாக வாழலாம் என்று நேரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்  தேவையான அளவுக்கு தூங்க வேண்டும்.


Tags : home , Do not,feel,have been home, 21 days
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...