×

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமாகா சார்பில் ரூ.10 லட்சம் நிதி

சென்னை: முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமாகா சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படுகிறது.  இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடை தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதை தமாகா சார்பில் வரவேற்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமாகா சார்பில் ₹10லட்சம் அனுப்பப்படுகிறது.

 தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா வைரஸ் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து துறையினரும் நிதி வழங்க முன்வர வர வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamaraka , Tamaraka donates,Rs 10 lakh,coronation prevention
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...