×

சில்லி பாயின்ட்...

* கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்குவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.
* லாகூரில் ஓட்டல் நடத்தி வரும் ஐசிசி நடுவர் அலீம் தார், கொரோனா பரவலால் வேலை இல்லாமல் திண்டாடும் ஏழைகளுக்கு தங்கள் ஓட்டலில் இலவச உணவு வழங்க முடிவு செய்துள்ளார்.
* ‘கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை. இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளேன்’ என்று அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (37 வயது) கூறியுள்ளார்.
* தென் ஆப்ரிக்க அணி முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் நேற்று தனது 41வது பிறந்தநாளை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடினார்.
* ‘ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தாலும், பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வேட்கை கொஞ்சமும் குறைந்துவிடாது. போட்டி எப்போது நடந்தாலும் இந்தியாவுக்காக பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. இப்போதைக்கு உடல்நலமே முக்கியம். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக நிறைய அவகாசம் உள்ளது’ என்று குத்துச்சண்டை வீரர் அமித் பாங்கல் கூறியுள்ளார்.
* டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தனது அறக்கட்டளை மூலமாக உணவு வழங்க கவுதம் கம்பீர் ஏற்பாடு செய்துள்ளார்.
* ஐசிசி உலக கோப்பை போட்டிக்குத் தயாராக ஐபிஎல் தொடர் மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணி தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
* கொரோனா நிவாரண நிதியாக ₹42 லட்சம் வழங்கப்படும் என்று சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
* ஸ்பெயினில் கொரோனா பரவல் அதிகரித்து லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் ஆட்டங்கள் ரத்தாகியுள்ள நிலையில், தங்கள் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கப் போவதாக பிரபல கால்பந்து கிளப் பார்சிலோனா எப்சி அறிவித்துள்ளது.
* பிரான்ஸ் கால்பந்து அணி 1984 ஐரோப்பிய தொடரில் சாம்பியன் பட்டம் வென்றபோது பயிற்சியாளராக இருந்த மைக்கேல் ஹிடால்கோ (87 வயது) நேற்று முன்தினம் காலமானார்.

Tags : Chili Point ...
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு