×

10 மாத குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் கொடூரம் மேலும் ஒருவர் உயிரிழப்பு பாதித்தோர் 64 ஆக உயர்வு

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துமகூரு  மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் நேற்று இறந்தார். இதன் மூலம், இம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.  நேற்று இறந்த முதியவர் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஷிரா தாலுகாவை  சேர்ந்தவர்.  அரபு நாடுகளுக்கு  சென்றிருந்த இவர், கடந்த 5ம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில்  மூலம் டெல்லி சென்றுள்ளார். அங்குள்ள ஜாமியா மசூதி நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட பின், 11ம் தேதி துமகூரு திரும்பினார். 18ம் தேதி காய்ச்சல்  ஏற்பட்டுள்ளது. 19ம் தேதி ஷிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றார்.  தொண்டை வலி, சளி, தலைவலி, காய்ச்சல் அதிகரித்தை தொடர்ந்து 24ம்  தேதி துமகூரு மாநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார்.

அவரது  ரத்தம் மற்றும் தொண்டை சளியை பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தாக்கி இருப்பது உறுதியானது. உடனடியாக அவருக்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நேற்று அவர்  உயிரிழந்தார்.  இதைத் தொடர்ந்து, அவருடன் நெருக்கமாக பழகிய  33 பேரை அதிகாரிகள் தனிப்படுத்தி, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இவர்களில் 10 மாத குழந்தையும் அடங்கும்.  மேலும், 20 வயது இளம்  பெண், 25 வயது இளைஞர், 22 வயது இளைஞர், 31 வயது இளம் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கர்நாடகாவில் இந்நோய் பாதித்தோரின் எண்ணிக்ைக 64 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Karnataka , 10 month old baby, Rona, Karnataka, one dies
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...